கோவை, சத்தி சாலையில் உள்ள மாருதி சுசுகி அரீனா ஷோரூமில், ஆதி மாருதியின் 15ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் விமர்சையாக புதன்கிழமை நடைபெற்றது.

9b scaled

2012ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஆதி மாருதி தொடங்கப்பட்டது. கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் 85க்கும் மேற்பட்ட இடங்களில் ஆதி மாருதியின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. 2500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, ஆதி மாருதியில் பெண் பணியாளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 14 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது 15ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, துவக்க விழா கொண்டாட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

9a 3 scaled

கோவை, சத்தி சாலையில் உள்ள அரீனா ஷோரூமில் நடைபெற்ற விழாவில் ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் சீனிவாசன், இணை நிர்வாக இயக்குனர் கலைவாணி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதியின் அனைத்து துறைத் தலைவர்கள், பணியாளர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்வில் அனைவரும் ஆதி மாருதி உடனான அனுபவங்களையும், வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.