கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில், நவம்பர் 16 முதல் 21 வரை தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது.

‘தொலைநோக்குச் சிந்தனையிலிருந்து மதிப்புமிக்க தொழில் உருவாக்கம் வரை: நிறுவனரின் பயணம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்று, தங்களது அனுபவங்களையும் தொழில்துறை சார்ந்த கருத்துகளையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

புதிய தொழில் தொடங்குதல், புதுமையான சிந்தனை, வணிக உத்திகள் மற்றும் நிலையான தொழில் வளர்ச்சி குறித்து சிறப்புரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் குழு விவாதங்கள் நடைபெற்றன.

இதில், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சிங்கை ஜி. ராமச்சந்திரன், வில்ஃப்ரெஷ் நிறுவனத்தின் செல்வகுமார் வரதராஜன், ஸ்டார்ட்அப் பயணம் நிறுவனத்தின் நவின் கிருஷ்ணா, இன்டுலீட்ஸ் நிறுவனத்தின் ராகவ் ஹரிஹரசுப்பிரமணியன், தி கோகனட் கம்பெனி நிறுவனத்தின் பிரித்வி ராஜ், ஸ்பிக்ரா நிறுவனத்தின் ராதா லட்சுமி, எ டாட்லர் திங் நிறுவனத்தின் சுவாதி ஸ்ரீ, ஃபின்கிளினிக் நிறுவனத்தின் கவுதம் தாமோதரசாமி, ஸூக்கா பிஸ்ஸேரியா மற்றும் பூஸ் பிஸ்ஸா நிறுவனங்களின் அருண்குமார் விஸ்வேஸ்வரன், சம்மோர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தீபா முத்துக்குமாரசாமி மற்றும் காப்பி 2.0 நிறுவனத்தின் சத்யன் பாலமாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.