சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நகை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ், கோவை ஆர்.எஸ். புரத்தில் தனது புதிய நகை விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது.
இங்கு தங்கம், வைரம், பிளாட்டினம், ஜடாவ் மற்றும் வெள்ளி நகைகளின் விரிவான தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய கோயில் நகைகள், நேர்த்தியான ஜடாவ் நகைகள் முதல் நவீன வடிவமைப்பிலான வைர மற்றும் பிளாட்டினம் நகைகள் வரை, பல்வேறு ரசனைகள் மற்றும் விசேஷ நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையில் பிரத்யேக நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நகையும் நிறுவனத்தின் சொந்த வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பிரிவிலேயே, திறமையான கைவினைக் கலைஞர்களால் நேர்த்தியாக உருவாக்கப்படுகிறது.
இதுகுறித்து, ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கட்ரேலா கூறுகையில்: நேர்த்தியான கைவினைத் திறனுக்கும், சிறந்த நகை வடிவமைப்புகளுக்கும் கோவை மக்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அத்தகைய சிறப்புமிக்க கோவை நகரில் எங்களது ஜே.சி.எஸ். நிறுவனத்தின் புதிய விற்பனையகத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இங்கு இடம்பெறும் ஒவ்வொரு நகையும் எங்களது சொந்த
