தமிழகத்தில் உள்ள மலை கோயில்கள் ஆன்மிகத் தலங்களாக மட்டுமல்லாமல், பல்லுயிர் வளத்தைக் காக்கும் வனச் சூழலியல் மண்டலங்களாகவும் திகழ்கின்றன. இவற்றின் பசுமையும் தூய்மையும் பாதுகாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் செயலாளர் பிரகாஷிடம் கூறியதாவது:-
ஓராண்டுக்கு முன்னர் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை உட்கொண்டு யானை உயிரிழந்த சம்பவம் கோவையில் நடைபெற்றதை நாம் செய்திகளில், சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம்.
நெகிழி கழிவுகளால் மலை கோயில்களின் புனிதத்திற்கும், மலையின் பசுமை தன்மைக்கும், யானை மட்டுமல்லாது எண்ணற்ற வன உயிர்களுக்கும் பாதிப்பு வெவ்வேறு வகையில் ஏற்படுகிறது.
மலைக்கோயில்களுக்கு வரும் பொதுமக்கள் அவர்களுடன் கொண்டுவரும் மினரல் வாட்டர் பாட்டில், தின்பண்ட கவர்களை மலைகளிலேயே வீசிவிட்டு செல்வது தொடர்கிறது.
பக்தர்கள் சாமிக்கு வழிபாடு செய்ய எடுத்துவரும் பால் பாக்கெட், நெய் எண்ணெய் தேன் டப்பா, கற்பூர ஊதுபத்தி கவர்கள் போன்றவற்றை “ஒரு சில” கோயில் நிர்வாகங்கள் முறையாக அப்புறப்படுத்துவது இல்லை.
அவற்றை அவர்கள் மலைகளில் வீசுவிடுகின்றனர். இதனால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகின்றது. இது தொடரக்கூடாது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மலைக்கோயில்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கவேண்டும். இதற்கான நடவடிக்கையை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் எடுக்கவேண்டும் என நாங்கள் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
