துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மாதம் 1 முறை நடைபெறும். அந்நாளில் அந்த துணை மின் நிலயத்தில் மின் விநியோக பணிகள் வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும். இதனால் அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் தற்காலிக மின்தடை ஏற்படும்.
அந்த வகையில் நாளை கோவையில் 2 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம் : இதன் கீழ் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்: ஆா்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கௌலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கா் சாலை, சுக்கிரவாா்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி.காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரிய கடைவீதி (ஒரு பகுதி), இடையா் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).
சின்ன தடாகம் துணை மின் நிலையம் : இதன் கீழ் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்.
மின் தடை ஏற்படும் இடங்கள்: சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒருபகுதி, பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம்.

