நேரு காலேஜ் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது.
ஸ்கூட்ஸ் பிடிஇ லிட் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிராந்திய பயணிகள் விற்பனை மேலாளர் முரளி வெங்கடாச்சலம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சமீப காலங்களில் விமானப் போக்குவரத்துத் துறை அடைந்துள்ள வளர்ச்சியையும், அதனால் இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகளுக்குக் கிடைத்துள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளையும் விளக்கினார்.
நேரு கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலருமான கிருஷ்ணதாஸ் விழாவிற்குத் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். கல்வி மற்றும் நிர்வாகப் பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் நாகராஜா சிறப்புரையாற்றினார்.
