உலக அளவில் 2026ம் ஆண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை பெற்றுள்ள அவென்ஜ்ர்ஸ் திரைப்பட வரிசையின் 5ம் பாகமான அவென்ஜ்ர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் முன்பதிவு நேற்று துவங்கியது.
இத்திரைப்படம் டிசம்பர் 17, இந்தியாவில் வெளியாகிறது. வழக்கமான திரையரங்குகளுக்கு அல்லாமல் ‘இன்பினிட்டி விஷன்’ என்றழைக்கப்படும் பிரேத்தியேக திரை அகலம், துல்லியம் மற்றும் ஆடியோ தெளிவு உடைய திரையரங்குகள் என வால்ட் டிஸ்னி நிறுவனத்திடம் அங்கீகரிக்கப்பட்டவைகளுக்கு மட்டும் தற்போது முன்பதிவு துவங்கியுள்ளன.
இதற்காகவே கோவையில் பிராட்வே, கற்பகம் கிராண்ட்ப்ளெக்ஸ் மற்றும் கே.ஜி.சினிமாஸ் அரங்குகளில் இந்த இன்பினிட்டி விஷன் தரச்சான்று பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக அந்த அரங்கங்கள் அந்த அங்கீகாரத்தை பெற்றன.

நேற்று அவென்ஜ்ர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியது.ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 3 திரையரங்குகளிலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. முதல் நாள் காட்சிகள் மட்டுமல்ல அதற்கு அடுத்த 5 நாட்களுக்கான காட்சிகளும் வேகமான தீர்ந்து வருகின்றன. இது வெறும் இன்பினிட்டி திரைகளின் நிலவரமே. பிற திரைகளுக்கான முன்பதிவுகள் துவங்கினால் அதற்கும் அமோக வரவேற்பு இருக்கும் என்கின்றனர் திரைப்பட ஆர்வலர்கள்.

அவென்ஜ்ர்ஸ் திரைப்படத்தால் கோவை திரையரங்குகளுக்கு நல்ல வர்த்தகம் இந்த ஆண்டு இறுதியில் நிகழும் என எதிர்பார்ப்புகள் உள்ளன.
கடைசியாக 2019ல் வெளிவந்த அவென்ஜ்ர்ஸ் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.370 கோடி வசூல் செய்தது. உலகம் முழுக்க ரூ.27,000 கோடி வசூல் செய்தது. ஆம், ரூ.27,000 கோடி தான். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் அவென்ஜ்ர்ஸ் டூம்ஸ்டே வெளிவருகிறது என்பதால் உலக பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரெக்கார்டுகள் தவிடுபுடியாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய நடிகர்கள் ‘ஆர்.டி.ஜே’ மற்றும் கிரிஸ் எவன்ஸ் மீண்டும் களமிறங்குவதால், அரங்கங்கள் அதிரப்போவது உறுதி. விரைவில் அவென்ஜ்ர்ஸ் திருவிழாவுக்கு தயாராகின்றனர் ரசிகர்கள்.

