தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி வரும் நவம்பர் 5-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் நேரடியாக பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு பயிற்சிக் கட்டணம் ஒருவருக்கு ரூ.850. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 மட்டும். மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: 9629496555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.