தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் மாதத்திற்கான பயிற்சி வரும் நவம்பர் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தேனீ இனங்களைக் கண்டறிந்து வளர்க்கும் முறைகள், பெட்டிகளில் தேனீ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, தேனீக்களுக்கு உணவளிக்கும் பயிர்கள், மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூலை அதிகரிக்கும் பயிர்கள் குறித்து விளக்கமளிக்கப்படும்.
மேலும், தேனைப் பிரித்தெடுக்கும் முறை, தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், அன்றைய தினம் காலை 9 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறைக்கு நேரில் வர வேண்டும். அடையாளச் சான்றை சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக ரூ.590-ஐ நேரடியாகச் செலுத்த வேண்டும்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சியின் நிறைவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
