கோவை, குறிச்சி குளத்தின் பராமரிப்பு பணிகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். குளக்கரை பகுதிகளில், சுத்தம் செய்து, மரக்கன்றுகளை நடவு செய்து, முறையாக பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, காந்திபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் நூலகத்தினை நேரில் பார்வையிட்டு, நூலகத்தின் முன்புற சாலைகளை சீரமைத்து, சாலையின் மைய தடுப்பு பகுதியில், செடிகளை நடவு செய்து, பராமரித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
