வரலாற்றுச் சிறப்புமிக்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பற்றிய, தகவல்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட “பேரூரா படீசா”, புத்தகம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

நல்லறம் அறக்கட்டளையால் கருத்தாக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்ட இந்தப் பேரூரா படீசா புத்தகம், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் குருமூர்த்தியால் எழுதப்பட்டது.

பண்டைய பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் கட்டடக்கலைச் சிறப்பு, புனித வரலாறு, கலைநயமிக்க நுணுக்கங்கள் மற்றும் நாகரிக முக்கியத்துவம் ஆகியவற்றை ஆவணப்படுத்தி உள்ளது இப்புத்தகம்.

20260417 205732

சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம் இந்நூலை வெளியிட, முதல் பிரதியை பிரிகோல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன்,

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர். நாகராஜன், பேரூர் ஆதீனம், கௌமார மடாலயத்தின் ராமானந்த குருமார குருபர சுவாமிகள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நல்லறம் அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. பேரூர் பட்டீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றின் படித்துறையில் அதிநவீன வசதிகளுடன் தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.