சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் நடைபெற்றது.

இதில், தொழில்முனைவோர் துறையில் சாதனை படைத்த கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் வெற்றிப் பயணம் பாராட்டப்பட்டது. மெக்கானிக்கல் பொறியியல் படித்த முன்னாள் மாணவர்களான அய்யந்துரை, கௌதம் ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சுகுணா நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, சுகுணா, கல்லூரி முதல்வர் கோவிந்தராஜலு, டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராகப் பொது மேலாளர் சண்முக சிவா, சிறப்பு விருந்தினராக கோவை மாவட்டத் தொழில் மையத்தின் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) திலகவதி ஆகியோர் பங்கேற்றனர்.

கௌரவ விருந்தினர்களாக ஜெனரிக் ஆட்டோமெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தங்கவேலு, நிறுவனத்தின் உரிமையாளர் சித்ரலேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் திறன்களை வளர்த்தல், சுயதொழில் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்கள், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.