டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முனைவர் டி.எஸ். கார்த்திக் நினைவு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் நினைவு தொழில்நுட்ப சொற்பொழிவு நடைபெற்றது.
கல்லூரியின் முன்னாள் மாணவரும், சிறந்த கல்வியாளருமான மறைந்த டி.எஸ்.கார்த்திக் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வியில் சிறந்து விளங்கும் 2ம் ஆண்டு இ.சி.இ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாணவி தாரணிகா, மாணவர் தமிழ்வாணன் ஆகியோருக்கு தலா ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
“செயற்கை நுண்ணறிவும் மின்னணுவியலின் எதிர்காலமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற சொற்பொழிவில், சென்னை இன்னோஆர்ட் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்பத் தலைவர் அருண்ராஜா உரையாற்றினார்.
நிகழ்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அய்யப்பன், டி.எஸ். கார்த்திக் அவர்களின் துணைவியார் செந்தமிழ்ச்செல்வி, கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகக் குழுவினர் கலந்து கொண்டனர்.
