ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும், பைக் டாக்சிகளை தடை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை ஜில்லா ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து ஆட்டோ தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கத் தமிழக அரசு சிறப்புத் திட்டத்தை தீட்ட வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவையில் இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுனர்கள், பொருளாதார நெருக்கடியில் இருந்து ஆட்டோ தொழிலை பாதுகாக்க ஆட்டோக்களுக்கு பெட்ரோல், டீசல் மானியம் வழங்க வேண்டும், ஆட்டோ தொடர்பான உதிரி பாகங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
எப்.சி., ஐ.என்.சி செய்வதற்கு மானியம் வழங்க வேண்டும், 30 கிலோமீட்டர் வரை பர்மிட் என்ற விதியை திருத்தி மாநிலம் முழுவதும் இயக்க அனுமதி வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்

