கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் வணிகவியல் கணினிப் பயன்பாட்டுத் துறையும், கோவைக் குளங்கள் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, குன்னத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தூய்மைப் பணியினைச் செய்தது.

cleaning 1 scaled

குன்னத்தூர் ஏரிக்கரையையொட்டிய வனப்பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது. நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் கீதா வாழ்த்துரைத்தார். நிகழ்வில் கல்லூரி மாணவர்களும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும்  கலந்துகொண்டு தூய்மைப் பணியை செய்தனர்.