கோவை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் விவரங்கள் செய்தித்தாள்கள், ஆன்லைன் செய்தி தளங்கள் மூலம் வெளிவருகின்றன. மின் நுகர்வோரின் கைபேசி எண்களுக்கும் இந்த விவரங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்த தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள, அதாவது 1 வாரத்திற்கு முன்பே அறிந்துகொள்ள மின் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் 2 மாதங்களுக்கும் மேலாக இந்த இணையத்தளத்தில் தகவல்கள் சரிவர பதிவு செய்யப்படுவதில்லை.
கோவை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ள மின்தடை விவரங்கள் 2 மாதங்களாக தெளிவாக வெளிவருவதில்லை. மக்களுக்கான தகவல்கள் வெளியிடப்படும் தளங்கள் அனைத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பதை மறுஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

