கோவை மாநகரின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. மாநகரில் உள்ள பிரதான பகுதிகளான அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் மட்டுமல்லாது உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் என பல இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டது.

வெள்ளலூர், போத்தனூர், குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தன. தகவல் அறிந்த கோவை மாநகராட்சி அதிகாரிகள் இரவு பகலாக களத்தில் இறங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பெய்த கனமழையால் செல்வபுரத்தின் ஒரு பகுதியில் (சுண்டக்காமுத்தூர் ரோடு) குடியிருப்புக்குள் நீர் புகுந்தது. இதனால் போக்குவரத்தும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் அரசு அதிகாரிகள் உடன் மேயர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தினர். தேங்கிய மழைநீரை வெளியேற்ற தற்போது நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது.
WHYNO scaled

கோவை பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாரும் இரவும் காலையும், மாநகரில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். இன்று காலை செல்வபுரத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள துயரை நேரில் ஆய்வு செய்தார். தற்போது அங்கு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு, நிலைமை சீரமைக்கப்பட்டு வருகிறது.

எங்கே போனார் எம்.எல்.ஏ?

சமூக வலைத்தளங்களில் “கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் கனமழை, தொகுதி அமைச்சர் செந்தில் பாலாஜி எங்கே?” என கேள்வி கேட்பது போன்ற பதிவுகள் எழுந்துள்ளன.

செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து நீர் வெளியேறியதன் காரணமாக பாதிப்பு செல்வபுரத்தில் ஏற்படுத்து.

கடந்த தேர்தலில் அவர் கோவை தெற்கில் நின்ற போது எந்த பகுதிக்கு நடந்து சென்று வாக்குசேகரிக்க சென்றாரோ அங்கு தான் மழைநீர் சாலை முழுக்க வெளியேறி மக்களை சிரமத்துக்குளாக்கி இருக்கிறது.
WHEREIS scaledஇந்த கனமழை காலத்தில் மக்கள் நிலை என்ன என பார்க்க அவர் வந்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் மக்கள் பேச துவங்கி உள்ளனர்.
POCIC 1 scaled

கடந்த ஆட்சியில் கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இப்போது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறும் நீர் கழிவு நீர் கால்வாய் வழியாக தான் செல்லும். இதை துருவாரி 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதை செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தி இருக்கலாமே என கேள்வி எழுகின்றது.

மழை தாக்கம் கோவையில் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று அவர் கரூர் மாவட்டம், நெரூரில் உள்ள கோவில் நிகழ்வில் தான் பங்கெடுத்துள்ளார்.
SENTHIL scaled
கோவை தெற்கில் வெற்றி பெற்றாலும் அவரின் மனது கரூரில் தான் உள்ளதாக தெரிகிறது.கொஞ்சம் கவனத்தை கோவை தெற்கு தொகுதியின் பக்கம் திருப்பலாமே…