கோவை மாநகரத்தின் பரபரப்பான சாலைகளில் மேட்டுப்பாளையம் சாலையும் முக்கியமான ஒன்று. இதன்காரணமாகவே இந்த வழித்தடத்தில் 4 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
MTP TRAFFIC scaledவடகோவை அடுத்து அமைந்துள்ள அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், சுற்றுப்புறத்தில் உள்ள உணவகங்கள், கடைகளில் பணி செய்யும் பெண்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவர்.
FOBMTP scaledசாலையை கடந்து மாணவிகள், பாதசாரிகள் பாதுகாப்பாகவும், எளிதாகவும் செல்ல இங்கு நடைமேம்பாலம் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அதில் படிக்கட்டுகள் மட்டுமே உள்ளன. இதன் காரணமாக நடைமேம்பாலத்தை பயன்படுத்த பாதசாரிகளிடம் தயக்கம் உள்ளது. இதில் லிப்ட் வசதி அல்லது எஸ்கலேட்டர் வசதி இருந்தால் பயன்பாடு அதிகரிக்கும், எனவே அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக உள்ளது. ஆனால் அதெல்லாம் நடக்க வாய்ப்பு குறைவு தான் என்கின்றனர் இந்த நடைமேம்பாலத்தை பயன்படுத்துவோர்.

இது ஒருபுறம் இருக்க, காலை, மதிய நேரங்களில் பயன்படுத்தினாலும், மாலை, இரவு நேரங்களில் இதை பயன்படுத்த பெண்கள் தயங்குகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்த நடைமேம்பாலத்தில் போதிய அளவு வெளிச்சம் இல்லாததும், பராமரிப்பு குறைபாடும் தான்.

நடைமேம்பாலத்தை இரவு நேரத்தில் பயன்படுத்தும் பெண் ஒருவர் கூறுகையில்:-
darkwalk scaled
“இரவு நேரங்களில் பணியை முடித்துவிட்டு பாரதி பார்க் ரோடு வழியே வந்து சாலையை கடக்க, இந்த மேம்பாலத்தை தான் பயன்படுத்துவோம். அவ்வாறு செல்லும் போது, மேலே செல்ல மிக அச்சமாக இருக்கும். மின் விளக்குகள் எரியாமல் போவதால் இருட்டு மிகுதியாக இருக்கும். குப்பைகள் சில நேரம் தேங்கி கிடக்கும், மழைபெய்தால் மழைநீர் உள்ளே தேங்கும். இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்கிறோம். அதே போல கல்லூரி வளாகத்தை நோக்கி அமைந்துள்ள இறங்குமிடத்தில் தளம் பழுதடைந்து உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.இதை சரி செய்தால் அதிகமானோருக்கு இந்த நடைமேம்பாலம் பயனுள்ளதாக இருக்கும்,” என கூறினார்.

எனவே இந்த பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தில் போதிய மின்விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அரசு ஒப்புதல் பெற்று லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதியை வழங்க வேண்டும் என மாநகராட்சியிடம் பெண்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அதேபோல, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் விரைவாக கொண்டுவரப்படவேண்டும்.