ஓசூரில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான குங் பூ விளையாட்டு போட்டியில், கோவை சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை கணிப்பொறி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி ஸ்ரீமதி முதலிடம் பெற்றுள்ளார். அவரை கல்லூரி தாளாளர் லக்ஷ்மிநாராயனசாமி, தலைவர் சுகுணா, முதல்வர் ராஜ்குமார், டீன் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.