தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17ம் தேதியும் தொடங்குகிறது.

11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டும் 2027 மார்ச் 5ம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கக கூட்ட அரங்கில் பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார். மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், தேர்வு அட்டவணை சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு

பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி நிறைவடைகிறது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை

மார்ச் 3 – தமிழ்

மார்ச் 9 – ஆங்கிலம்

மார்ச் 12 – வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்

மார்ச் 15 – கணினி அறிவியல், கணினி பயன்பாடு, உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

மார்ச் 19 – உயிரியல், வரலாறு, வணிக கணிதம்

மார்ச் 23 – இயற்பியல், பொருளியல்

மார்ச் 29 – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது), உணவு சேவை மேலாண்மை

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியிடப்பட உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை

மார்ச் 17 – தமிழ்

மார்ச் 25 – ஆங்கிலம்

மார்ச் 31 – கணிதம்

ஏப்ரல் 5 – அறிவியல்

ஏப்ரல் 9 – சமூக அறிவியல்

ஏப்ரல் 12 – விருப்பமொழி

11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

11ம் வகுப்புக்கு வழக்கமான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 11ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மட்டும் 2027 மார்ச் 5ம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.