கோவை அஜ்ஜனூரில் உள்ள பாரதிய வித்யா பவன் பொதுப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காமராஜரின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை குறுநாடகமாக நடித்துக் காட்டினர்.

kids 2 scaled

பள்ளியின் முதல்வர் வித்யாசங்கர் பேசுகையில்: காமராஜர் கல்வித் துறையில் கொண்டு வந்த புரட்சிகரமான மாற்றங்களையும், ஏழை எளிய குழந்தைகள் பள்ளிக்கு வந்து கல்வி கற்க அவர் கொண்டு வந்த இலவச மதிய உணவுத் திட்டத்தையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். காமராஜரின் சுயநலமற்ற மக்கள் சேவையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்றார்.