இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறை சார்பில் “இணையப் பாதுகாப்பு, நெறிசார் ஊடுருவல் மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவு” என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.

4a 12 scaled

கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை தாங்கினார். கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கவிதா, போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜி, தீர்வு கட்டமைப்பாளர் மற்றும் இணையப் பாதுகாப்பு மேலாளர் செல்வராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.

நவீன இணையப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் நுண்ணறிவு மற்றும் இணைய அச்சுறுத்தல் பகுப்பாய்வு, இணையப் போர், தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய அச்சுறுத்தல்கள், ஏஐ யுகத்தில் தரவு தனியுரிமை ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றது.