சென்ற வாரம் கோவை மாநகரின் சில பகுதிகளிலும், மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்து வெப்பத்திலிருந்து சிறு விடுதலை தந்தது.

இந்த வாரம் (அக்டோபர் 12-17) கோவை மாட்டத்தில் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையானது மிதமானது முதல் கனமழை வரை பதிவாகக்கூடும் என்பதோடு, குறிப்பாக மதிய வேளைகளிலும் இரவு நேரங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக, கோவை மாநகரப் பகுதிகளில் மழை பெய்வதற்கு 50-50 வாய்ப்புகள் மட்டுமே உள்ளதால், ஆங்காங்கே மட்டுமே மழை பெய்யக்கூடும். அதேவேளையில், மாநகரப் பகுதிகளைக் காட்டிலும் கோவை மாவட்டத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பரவலாகவும் நன்றாகவும் மழை பெய்யக்கூடும்.

தகவல் : சுஜய் – வானிலை ஆய்வாளர், கோவை.