ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்குமார் தேசியக் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவின் முக்கிய அம்சமாக, ரத்ததான சேவையாளர் கவிபாரதி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரசாத் மற்றும் உறுப்பு தானம் செய்த கலைவாணி  ஆகியோர் சிறந்த மனிதநேய சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர்.

பள்ளி முதல்வர் ஜெயந்தி, சுதந்திரத்தின் மகத்துவத்தையும், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும் எடுத்துரைத்து, மாணவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரம், போராட்டம் மற்றும் தியாகங்களை எடுத்துரைக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.