திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் 4.5 ஏக்கர் பரப்பளவில் புதிய விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது.

விழாவில் நேஷனல் மாடல் பள்ளிக் குழுமம் தாளாளர் மோகன் சந்தர், செயலாளர் உமா மோகன் சந்தர், இயக்குநர், முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கோவை, சுங்கவரி ஆய்வாளர் முஹமது ஷலாலுதீன் கலந்துகொண்டு, இந்தியாவிலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஊதாநிற ஓட்டப்பந்தய ஓடுகளத்தைத் திறந்துவைத்தார்.

ஓடுகளத்தின் தொடக்க ஓட்டமாக நேஷனல் மாடல் குழுமத்தின் பல்வேறு கிளையான கருமத்தம்பட்டி, பீளமேடு, உடுமலைப்பேட்டை மாணவர்கள் 4×100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் முதல்வர்கள் கைப்பந்து, எறிபந்து, கால்பந்து, கூடைப்பந்து, மட்டைப்பந்து முதலிய விளையாட்டு மைதானங்களையும் திறந்து வைத்தனர்.
விளையாட்டு மைதானத்தில் நேஷனல் மாடல் பள்ளிக் குழுமத்தின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் விளையாடி மகிழ்ந்தனர்.
