ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மேக்னிஃபிகோ நிகழ்ச்சி நடைபெற்றது.

சம்பூர்ணம் குழுமத்தின் தலைமைச் செயல்பாடு அதிகாரி சுருதி கிருஷ்ணா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, கல்லூரிகளுக்கிடையே இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் புதுப்புது அனுபவங்களைக் கற்றுக்கொண்டு பல்வேறு சவால்கள்களை எதிர்கொள்ளும் விதத்தை நன்கு அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு புதிய வாய்ப்பும் மாணவர்கள் தங்களின் திறமைகளைக் கண்டறிந்து ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள உதவும் என்றார்.

கல்லூரி முதல்வர் சித்ரா, கல்லூரிகளுக்கு இடையிலான இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதன் வழி பிறரோடு பழகுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றல் போன்றவற்றை வளர்த்துக்கொள்ள முடியும். தனிவாழ்விலும், தொழில்முறையிலும் மாணவிகள் சிறந்து விளங்க இத்தகைய வாழ்வியல் திறன்கள் பெரிதும் துணைநிற்கும் என்றார்.

வணிகம் மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த பல்வேறு போட்டிகளில் மாணவிகள் தங்கள் படைப்பாற்றலையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர். பிராண்ட் பேட்டில், பட்ஜெட் பாஸ், வாக் ஆப் ஃபேம் மற்றும் பிஸ் பீ உள்ளிட்ட போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.