கோவை, நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக கைப்பேசி ஊடகவியல் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், கல்லூரியின் முதல்வர் மேரி பபியோலா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பயிற்சியில் பயிற்றுநராகத் தமிழ்த்துறையின் உதவிப்பேராசிரியர் கிரேசி மாணவிகளுக்குக் கைப்பேசியைப் பயன்படுத்திச் செய்திகளைத் தயாரித்தல், புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்தல், நேர்காணல் மேற்கொள்ளுதல், செய்திகளைத் தொகுத்து வழங்குதல் குறித்துப் பயிற்சி அளித்தார்.

இதன் மூலம் இன்றைய நவீன ஊடகச் சூழலில் கைப்பேசியைச் செய்தி சேகரிப்பு மற்றும் செய்தி உருவாக்கத்திற்கான பயனுள்ள கருவியாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டன.
மேலும், செய்தியாளர்களுக்குத் தேவையான கவனிப்பு, தகவல் சேகரிப்பு, படைப்பாற்றல் மற்றும் தகவல் பரிமாற்றத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழியல் கள மாணவிகள் கலந்துகொண்டனர்.
