கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் நாளான இன்று அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்.

அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது: விளையாட்டு வீரர்களை பார்க்கும் போது ஒரு புதிய நம்பிக்கை எழுகிறது. மாணவர்களை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல வேண்டுமென முதல்வர் செயல்படுகிறார். கல்வியில் நாம் நன்கு திகழ்ந்து வருகிறோம். அது நம் கல்விக்கு கிடைத்த வெற்றி, ஆனால் விளையாட்டு துறையில் பதக்கங்கள் வெல்வதில் எங்கு இருக்கிறோம் என தேட வேண்டி உள்ளது.

minister 2

விளையாட்டு துறையில் வீரர்களால் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்காக பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாது. திறமைகள் அனைவரிடமும் உள்ளது. அதனை நாம் வெளி கொணர வேண்டும். வலிகளை தாங்கும் மன உறுதி வேண்டும்.

54 விளையாட்டு போட்டிகள் இங்கு துவங்கிறது. கோவையில் 1,41,000 பேர் பதிவு செய்துள்ளது நம் முதல்வரின் வெற்றி என கூறலாம். மாவட்ட ஆட்சியரை நீங்கள் கலெக்டராக பார்த்துள்ளீர்கள், அவர் ஒரு விளையாட்டு வீரர். அவரும் விளையாட நம் மாவட்டம் இந்த முறை முதல் இடத்தில் வரவேண்டும் என்றார்.

தொடர்ந்து அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் போட்டிகளை துவக்கி வைத்து சிறிது நேரம் வாலிபால் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.