கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் “Crest of Excellence 2026” நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொங்கலூர்.நா.பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் இந்து முருகேசன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.
இந்த விழா கல்வி சிறப்புகள், ஆசிரியர் சாதனைகள் மற்றும் மாணவர் திறமைகளை பாராட்டும் விழாவாக திகழ்ந்தது.
சிறப்பு விருந்தினராக ஹெச்.சி.எல் நிறுவனத்தின் கேம்பஸ் ரிலேஷன்ஸ் துறை இயக்குநர் பிரசாத் கலந்து கொண்டு, மாணவர்களுடன் தொழில்துறை எதிர்பார்ப்புகள், தொழில் தயாரிப்பு திறன் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு சூழல் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியதற்காகbமாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியில் ஆராய்ச்சி சாதனைகளை ஊக்குவிக்கும் விதமாக 2025-2026 கல்வியாண்டில் ஆராய்ச்சி பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ரூ.44 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
