கோவை, போத்தனூரில் இருந்து ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சம்பல்பூர்-போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311) செப்டம்பர் 9 முதல் நவம்பர் 25 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் சம்பல்பூரில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், போத்தனூர்-சம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08312) செப்டம்பர் 11 முதல் நவம்பர் 27 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போத்தனூரில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும். இந்த ரயில் மறுநாள் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் சம்பல்பூர், பர்காரா சாலை, பாலங்கிர், டிட்லாகர், கேசிங்கா, முனிகுடா, ராயகடா, பார்வதிபுரம், பொப்பிலி, விஜயநகரம், கொட்டவலசா, துவ்வாடா, அனகாப்பள்ளி, சமல்கோட், ராஜமுந்திரி, நிடடவோலு, பீமவரம் டவுன், கைக்கலூர், குடிவாடா, விஜயவாடா, தெனாலி, சிராலா, ஒங்கோல், நெல்லூர், கூடூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
