தற்போது இன்ஸ்டாகிராமை திறந்தாலே ரெட்ரோ விண்டேஜ் 80ஸ் ஸ்டைல் புகைப்படங்கள் ட்ரெண்டாக மாறியிருப்பதை காண முடிகிறது.

பட்டுப்புடவை… பெரிய பஃப் வைத்த தலைமுடி… கண்களில் தடிமனான ஐலைனர்… காதில் பெரிய கம்மல்கள்… நெற்றியில் அழகான பெரிய பொட்டு…

பின்னணியில் ஒரு பழைய மாடல் கார். அருகில் மரங்களால் சூழப்பட்ட பழைய வீடு. காட்சியை இன்னும் அழகாக்கும் மஞ்சள் கலந்த கேமரா டோன்!

மொத்தத்தில் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், “1980களில் எடுக்கப்பட்ட போட்டோவா?” என்று ஒரு நிமிடம் யோசிக்கும் அளவுக்கு இருக்கிறது. இதுதான் தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வரும் ‘80’s ஏஐ லுக் ட்ரெண்ட்!

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களை ஒரு சுற்று சுற்றி வந்தாலே, 1980-களுக்கு திரும்பிப் போனது போன்ற உணர்வு இப்போது பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் இந்த புதிய ட்ரெண்டில் போட்டி போட்டு புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

WhatsApp Image 2026 09 09 at 11.25.22 AM

அந்த காலம்… அது அது வசந்த காலம்…!

ஒரு காலத்தில் பழைய காலத்து தோற்றத்தில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால், அதற்காக ஸ்டூடியோ தேட வேண்டும். பழைய வகை ஆடைகள் அணிய வேண்டும். பின்னணியில் பூங்கா, அரண்மனை அல்லது வண்ணமயமான திரை வைத்து போஸ் கொடுக்க வேண்டும்.

ஆனால் இன்று… ஒரு நல்ல புகைப்படம் இருந்தால் போதும். ஏஐ-க்கு சில வார்த்தைகளில் நாம் விரும்பும் ஸ்டைலை சொன்னால், அடுத்த சில நொடிகளில் நாம் 1980-களின் தமிழ் சினிமா கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ மாறிவிடுவோம்!

வீட்டை விட்டு வெளியே செல்லாமல், மேக்கப்பிற்கு மணிக்கணக்கில் அமராமல், ஒரு கிளிக்கில் 1980-களுக்கு சென்றுவிடலாம்.

80ஸ் ஸ்டைலில் என்ன ஸ்பெஷல்?

1980-களின் ஃபேஷனுக்கு தனி ரசிகர்கள் உண்டு. அந்த காலத்து உடைகள், சிகை அலங்காரம், மேக்கப், புகைப்படங்களின் நிறம் என அனைத்திலும் ஒரு தனி அடையாளம் இருக்கும்.

அந்த அடையாளங்களைத்தான் ஏஐ தற்போது மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது. பெல்பாட்டம் பேண்ட்கள், டெனிம் ஜாக்கெட்டுகள், ஓவர்சைஸ் பிளேசர்கள், பிரகாசமான நிறங்கள் என 80-களின் ஃபேஷன் மீண்டும் சமூக வலைதளங்களில் இடம்பிடித்துள்ளது.

அதேபோல், அந்த காலத்து நடிகர், நடிகைகளின் ஸ்டைலை நினைவுபடுத்தும் பெரிய பஃப் ஹேர் ஸ்டைல், சுருள் முடி, அடர்த்தியான சிகை அலங்காரம் ஆகியவையும் இந்த ட்ரெண்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

1200 675 27586503 thumbnail 16x9 vintage pics

80ஸ் ஹீரோயின் லுக்…

இந்த ட்ரெண்டில் பெண்கள் அதிகம் விரும்புவது, 80-களின் தமிழ் சினிமா நாயகிகளின் தோற்றத்தைப் போல மாறுவதைத்தான்.

பட்டுப்புடவை, பஃப் ஸ்லீவ் பிளவுஸ், பெரிய கம்மல்கள், அழகான விண்டேஜ் மேக்கப், நெற்றியில் பெரிய பொட்டு என அந்த காலத்து சினிமா நாயகிகளின் ஸ்டைல் ஏஐ புகைப்படங்களில் மீண்டும் உயிர் பெற்று வருகிறது.

குறிப்பாக அந்த காலத்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் ஹேர் ஸ்டைல் மற்றும் ஃபேஷனை நினைவுபடுத்தும் வகையிலான படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்படுகின்றன.

WhatsApp Image 2026 09 09 at 11.31.23 AM

80ஸ் ஹீரோவாக மாறும் ஆண்கள்

இந்த ட்ரெண்டில் பெண்கள் மட்டும் இல்லாமல், ஆண்களும் ஆர்வமாக இருப்பதை பார்க்க முடிகிறது. தடிமனான மீசை, கச்சிதமாக வாரப்பட்ட தலைமுடி, லூசான காட்டன் சட்டை, ஹை-வெய்ஸ்ட் பேண்ட், சில சமயம் தோளில் ஒரு துண்டு அல்லது பின்னணியில் பழைய கார்…

பார்த்த உடனே ஒரு 80-களின் தமிழ் திரைப்பட போஸ்டர் போல தோன்றும் அளவுக்கு ஏஐ உருவாக்கும் காட்சிகள் கவரும் வண்ணம் உள்ளன.

பழைய கேமராவின் மாயம்

இந்த ட்ரெண்டின் மிகப்பெரிய ப்ளஸ், அதன் விண்டேஜ் போட்டோ டோன். 80ஸ் ஏஐ லுக்கில் பழைய கேமராவில் எடுத்தது போன்ற மென்மையான நிறங்கள், சிறிய கிரெயின், மஞ்சள் அல்லது பழுப்பு கலந்த டோன் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

அதனால்தான் அந்தப் போட்டோக்களைப் பார்த்தவுடன், நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய குடும்ப ஆல்பத்தை புரட்டிப் பார்ப்பது போன்ற நாஸ்டால்ஜிக் உணர்வு ஏற்படுகிறது.

WhatsApp Image 2026 09 09 at 11.34.49 AM

இளையராஜா இசை

80ஸ் லுக் மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு அந்த காலத்தின் இசையும் சேர்ந்தால் தான் முழுமையான ரெட்ரோ அனுபவம் கிடைக்கும்.

அதனால்தான் பலரும் இந்த ஏஐ புகைப்படங்களை ரீல்ஸாக மாற்றும்போது, பின்னணியில் பழைய தமிழ் திரைப்பட பாடல்களை குறிப்பாக, இளையராஜா பாடல்களுடன் போஸ்ட், ஸ்டோரி போட்டு வருகின்றனர்.