கோவை அவிநாசி சாலையில் 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலைகள் மற்றும் பிரதான சாலைகளுக்கு அருகே மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையத்தடுப்புகளின் மேற்பகுதியில் பலவகை செடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு பச்சைப்பசேல் எனவும் பயணிக்கும்போது சற்று மென்மையான காற்றை வீசும் இந்த செடிகளுக்கு நடுவே பலரும் பலவகையிலான குப்பைகளை வீசி செல்கின்றனர்.
AVINASHIDUMP scaled

கடந்த காலங்களில் காலியான மது பாட்டில்களை குடிமகன்கள் வீசிச்சென்றதும் செய்திகளில் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில், பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் அருகே அமைந்துள்ள சர்வீஸ் சாலை ஓரமாக தங்கி, தூங்கும் ஆதரவற்ற நபர் ஒருவர், அங்கே உருவாகும் குப்பைகளை சேகரித்து, எடைக்கு போட இந்த பசுமை பகுதியை குப்பைத்தொட்டியாக மாற்றி உள்ளார்.
YELLOWSTRIP scaled

இதுபோல இந்த 10.1 கிலோமீட்டர் வழித்தடத்தின் கீழே பல இடங்கள் குப்பைக்காடாக மாறுவதற்கு முன்னர், மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், என அவ்வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் விரும்புகின்றனர்.