திருப்பூர், செங்கப்பள்ளியில் உள்ள கே.பி.ஆர். குழுமத்தின் ஒரு அங்கமான கே.பி.ஆர். சுகர் அண்ட் அப்பேரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், ஸ்ரீ பழனிசாமி கவுண்டர் செல்லம்மாள் நினைவு கோப்பை, பெண்களுக்கான எறிபந்து போட்டி நடைபெற்றது.

போட்டியில் சத்தியமங்கலம், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அரசூர், குவாண்டம் நிட்ஸ்–அரசூர், கார்மெண்ட் டிவிஷன்–தெக்கலூர், குவாண்டம் நிட்ஸ்–3 தெக்கலூர், கே.பி.ஆர். செங்கப்பள்ளி மற்றும் அவனிதா ஆகிய 9 அணிகள் கலந்து கொண்டன.
போட்டியின் முடிவில், குவாண்டம் நிட்ஸ்–3 தெக்கலூர் அணி முதலிடத்தையும், கருமத்தம்பட்டி அணி 2-ம் இடத்தையும், குவாண்டம் நிட்ஸ்–அரசூர் அணி 3-ம் இடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.பி.ஆர். மில் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சக்திவேல் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கே.பி.ஆர். குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
