டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது.

5c 1 scaled

விழாவிற்கு தலைமை தாங்கி என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் பேசுகையில்: வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சியும், தோல்விகளைத் தாண்டி மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கும் இன்றியமையாதவை. தொடர் முயற்சி, உறுதிப்பாடு, தோல்விகளில் இருந்து உரிய பாடங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவை தனிநபரின் திறமையை மேம்படுத்தி, சிறந்த சாதனைகளைப் படைக்க வழிவகுக்கும்.

பெற்றோர் வழங்கும் தொடர்ச்சியான ஊக்கம், வழிகாட்டுதல், ஆதரவு ஆகியவை மாணவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, அவர்கள் தங்களது இலக்குகளை நோக்கி முன்னேறி, உயர்ந்த நிலைகளை அடைவதற்கும் உறுதுணையாக அமையும் என வலியுறுத்தினார்.

எம்.சி.இ.டி.யின் தாளாளர் ஹரிஹரசுதன் சிறப்புரை வழங்கி பேசியதாவது: கல்வி என்பது மதிப்பெண்களுக்கு மட்டுமல்ல; மாணவர்களின் அறிவு, திறன், ஆளுமை, தொழில்திறன்களை ஒருங்கிணைந்து வளர்ப்பதே அதன் நோக்கம். ஆர்வம், திறமைக்கு ஏற்ப தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

5d 1 scaled

சிறப்பு விருந்தினராக தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்: ஆர்வம், திறமை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி, தொழில் துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உண்மை, அகிம்சை, நேர்மை போன்ற நற்பண்புகளை மாணவர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். சவால்களைத் தைரியத்துடன் எதிர்கொண்டு, தங்களது தனித்திறன்களை முறையாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார்.

5b 1 scaled

இந்த ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வில் 180+ கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற123 மாணவர்களுக்கு அருட்செல்வர் வித்யா சக்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 1,200 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. விழாவில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் முதல்வர் கோவிந்தசாமி, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.