சென்னையில் சாலைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்து வந்தது செய்தி ஆன நிலையில் இந்த நிலைமை கோவையிலும் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவை மாநகரில் இந்த வாரம் (23.8.26 முதல் 29.3.26 வரை) வானிலை எப்படி இருக்கும் என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

வரும் புதன்கிழமை வரை கோவை மாநகரில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பின்னர் மழைக்கு வாய்ப்பில்லை. வெப்பமானது 32° செல்ஸியஸ் முதல் 33° செல்ஸியஸ் வரை இருக்கும். கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மட்டும் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புகள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.