கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாண்டம் நிட்ஸ்-3 தெக்கலூரில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

12. a 2 scaled

இதில் சிறப்பு விருந்தினராக அவிநாசி காவல் ஆய்வாளர் ராஜா பிரபு, சார்பு ஆய்வாளர் அன்பு அரசு கலந்துகொண்டு கொடியேற்றினர். நிகழ்வில் கே.பி.ஆர் குழுமத்தின் மனிதவள மேலாளர்  தங்கவேல், குவாண்டம் நிட்ஸ் 3 யின் மனிதவள மேலாளர் வீரக்குமார், தொழிற்சாலையில் பணிபுரியும் 5000க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

12. b scaled 12. c scaled

நிகழ்வில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதில் நமது நாட்டின் அனைத்து மாநிலங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடை அலங்காரங்கள், சிலம்பம், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பங்குபெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.