கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 80வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு அணிவகுப்பு நிகழ்வு நடந்தது.

5. a 8 scaled

சிறப்பு விருந்தினராக சர்வதேசத் தடகள வீரர் மற்றும் வருமான வரித்துறை உதவியாளர் கிரிஷ் பீதோவன்   கலந்துகொண்டு, நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றக் கூடிய பொறுப்பும் ஆற்றலும் கொண்டவர்களாக இன்றைய கால இளைஞர்கள் விளங்குகிறார்கள். இளைஞர்களின் சிந்தனையில் தோன்றும் எழுச்சிமிகு எண்ணங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதோடு, சமூகத்தின் மேம்பாட்டிற்கும் துணைநிற்கும் என்றார்.

5. b 5 scaled

சுதந்திர தினத்தையொட்டி நடந்த கவிதை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், என்சிசி மற்றும் ஏர் ரைஃபிள் அகாடமியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரி முதல்வர் கீதா, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.