80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து கோவில்பாளையத்திலுள்ள ரூட்ஸ் மல்டிகிளீன் தொழிற்சாலையில் ரத்த தான முகாமை நடத்தியது.

கோவை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணதாசன் ராமதாஸ், முகாமை துவக்கி வைத்தார். இதில் அலுவலர்கள், பணியாளர்கள் ரத்த தானம் செய்தனர்.

7. roots scaled

ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கவிதாசன் பேசும்போது, அறிமுகமானவர்களுக்கு உதவும் போது நல்ல மனிதனாகிறோம், அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவும் போது நாமே இறைவனாகிறோம் என்றார்.

டாக்டர் கண்ணதாசன் ராமதாஸ் பேசுகையில்: ரத்த தானம் என்பது உயிர் காக்கும் சிகிச்சைக்கு மிகவும் அவசியம். ரத்த தானம் செய்வதில் ரத்தத்தின் உள்கூறுகளான ரத்தத் தட்டுக்கள் போன்றவைகள் தனித்தனியே உபயோகப்படுத்துகின்றோம். அதனால் ஏராளமானோர் பயனடைகின்றனர் என்றார்.

ஹெட் ஹெச்.ஆர் சரவணன், ஹெட் ஆபரேஷன்ஸ் திருமுருகன் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 200 பணியாளர்கள் ரத்த தானம் செய்தனர்.