இந்திய அரசின் “ஹர் கர் திரங்கா” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ‘இந்தியக் கொடி விதிமுறை 2002’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையும், தீத்திப்பாளையம் கிராமத்தில் ‘திரங்கா பேரணி’யையும் நடத்தியது.

தேசியக் கொடியின் முக்கியத்துவம், அதனை முறையாகக் காட்சிப்படுத்துதல் மற்றும் கையாளுதல்,  அதன் கண்ணியத்தையும் மதிப்பையும் காப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பேரூர் காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் வினோத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘இந்தியக் கொடி விதிமுறை 2002’-ன் முக்கிய அம்சங்களை விளக்கினார். பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி ‘திரங்கா பேரணி’யில் பங்கேற்றனர்.