ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரி, ரேஸ் கோர்ஸ் காவல் துறையினருடன் இணைந்து, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

பேரணியை காட்டூர் எல்லை உதவி போலீஸ் கமிஷனர் கோகுல கிருஷ்ணன், ரேஸ் கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் கல்லூரி முதல்வர் சத்யா ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டு  கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தியவாறு சுமார் 200 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.