கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் செயல்பட்டு வந்த அரசு பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, பணிகள் முடிந்த பின்னர் அங்கு மீண்டும் பேருந்து நிலையம் அமைக்க அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ரூ.20 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் தரமுயர்த்தப்படும் எனவும் , இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 2 பேருந்து நிலைய முனையங்கள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பேருந்து நிலையம் இயங்கி வந்த இடத்தில் 2ம் முனையமும், பேரூர் பைபாஸ் வழியே முதல் முனையமும் அமைத்திட திட்டமிடப்பட்டு, முதல் முனையம் மார்ச் 2026ல் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
HADNLE scaled
2ம் முனையம் அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த முனையத்தில் முக்கியப்பணிகள் பலவும் நிறைவேறி உள்ளன. சிறு சிறு பணிகளே மீதம் உள்ளன. தகவலின்படி இந்த முனையம் அடுத்த 2 மாதங்களுக்குள், அதாவது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரியவருகிறது.

இந்த முனையத்திற்குள் சாலைகள் அமைப்பதற்கு கூடுதல் நிதி ரூ. 3.6 கோடிக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. பேருந்து நிலைய முனையம் பெரியகுளம் அருகே உள்ளதால் அங்கு வழக்கமான தார்சாலைகள் அமைப்பதை விட கான்க்ரீட் சாலைகள் அமைப்பது சரியாக இருக்கும் என்பதால் அங்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது என தகவல்.