கோவை இந்துஸ்தான் கல்லூரியில் 10, 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தபட்டது.

மாநில கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை மற்றும் கொங்குநாடு அறக்கட்டளையின் சார்பாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசளிக்கும் பத்தாம் ஆண்டு விழா, இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கொங்கு வேளாளர் கவுண்டர்கள் அறக்கட்டளையின் தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். குமாரசாமி முன்னிலை வகித்தார்.

சிரவை ஆதீனம்  குமர குருபர சுவாமிகள், சமத்துவ ஆன்மீகச் செம்மல் அப்பர் அப்பரடிப்பொடி சொக்கலிங்கனார், நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி அன்பரசன், இந்துஸ்தான் கல்வி குழுமம் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், விவேகம் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம், பிரகதி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றினர்.

3. a 2 scaled

தொடர்ந்து, சுமார் 750 மாணவர்களுக்கு மேல் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவையில் சிறந்து விளங்குகின்ற கல்லூரி, மருத்துவமனை மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு சாதனையாளர் விருதும், சரஸ்வதி கண்ணையனுக்கு கலைவாணி தாய் விருதும், விவேகம் உயர்நிலைப் பள்ளி சுப்பிரமணியனுக்கு கல்வி நெறி காவலர் விருதும், பிரகதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியனுக்கு மனித நேயம் மாமணி விருதும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, 10, 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.