ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 34வது பட்டமளிப்பு விழா இன்று (28.1.2025) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தக்ஷின் பாரத் பகுதி பொது அதிகாரி கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். இதில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப் பிரிவுகளில் இருந்து சுமார் 1844 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். விழாவில், கல்லூரி முதல்வர் சிவகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் விஜயகுமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.