ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி மற்றும் கோவை டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் & ஹாஸ்பிட்டல் இணைந்து, சர்க்கரை நோய், இன்சுலின் பயன்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்சுலின் விழிப்புணர்வு தின நடைபயணம் நடைபெற்றது.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் மாருதி, நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராம்நகர் பூங்காவில் தொடங்கிய நடைபயணம், கோவை டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் & ஹாஸ்பிட்டல் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

நிகழ்வில் குரூப் கவர்னர் பிரதிநிதி துளசி சேது, ரோட்டேரியன்கள், கோவை டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நடைபயிற்சி ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சாய்சிட்டி தலைவர் டாக்டர் பாலமுருகன், இன்சுலின் விழிப்புணர்வு நடைபயணத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 1921ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான *ஃபிரெடரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் மற்றும் ஜான் மேக்லியோட் ஆகியோரால் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அவர் எடுத்துரைத்தார்.