நிர்மலா மகளிர் கல்லூரியில், ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சார்ந்த பல்கலைகழகங்களும், இந்தியப் பல்கலைக்கழகங்களும் பங்கேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன்மூலம் மாணவிகளின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரி முதல்வர் மேரிபபியோலா, செயலாளர் குழந்தை தெரஸ் கலந்து கொண்டனர்.
