ராம்ராஜ் காட்டன், ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, ‘கலர் இரண்டு விலை ஓன்று’ என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இரண்டு கலர் சட்டைகளை ரூ.995க்கு பெற்றுக்கொள்ளலாம்.

ராம்ராஜ் காட்டன் ஷோரூம்கள் மற்றும் முன்னணி ஜவுளிக்கடைகளில் கிடைக்கும் ‘கலர் இரண்டு விலை ஓன்று’ சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப, குறிப்பிட்ட ரகங்களில் உள்ள அரை கை அல்லது முழு கை கலர் சட்டைகளில் இரண்டு சட்டைகளை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட அல்லது தொகுத்து வழங்கப்படும் சட்டைகளுக்குப் பதிலாக, நிறம், வடிவமைப்பு, அளவு மற்றும் கை வகை ஆகியவற்றைத் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் இச்சலுகை உள்ளது.

வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு மேலும் எளிமையான, வசதியான மற்றும் மதிப்புமிக்க ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில் இந்தச் சிறப்பு சலுகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கும் இந்த கலர் சட்டைகள், அனைத்து வயதினரின் ரசனைக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அலுவலகம், குடும்ப நிகழ்வுகள், பண்டிகைகள் மற்றும் அன்றாட பயன்பாடு என அனைத்து தருணங்களுக்கும் ஏற்ற தேர்வுகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அருகிலுள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம்கள் அல்லது முன்னணி ஜவுளி கடைகளுக்கு சென்று ‘கலர் இரண்டு விலை ஓன்று’ சலுகையில் உள்ள தங்களுக்குப் பிடித்த கலர் சட்டைகளைத் தேர்வு செய்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.