தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 நடைபெற உள்ள நிலையில்,100% வாக்குப்பதிவு அவசியத்தை வலியுறுத்தி, ரூட்ஸ் நிறுவனம் சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.

கணபதி, சங்கனூர் சாலையில் உள்ள ரூட்ஸ் நிறுவன தலைமை அலுவலகத்தில் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நர்மதா, ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை இயக்குநர் கவிதாசன், இயக்குனர்கள் சந்திரசேகர், பாலசுப்பிரமணியம், நிதித்துறை தலைமை அதிகாரி ரவி ஆகியோர் தலைமையில் 100% வாக்களிப்போம் என்ற உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.

