தொழில்நுட்பம் அதிவேகமாக மாறிவருகிறது என்பது அவ்வப்போது வெளிவரும் நம்பமுடியாத தயாரிப்புகளால் அறிந்துகொள்ளமுடியும்.

10 ஆண்டுகளுக்கு முன் ‘மொத்த கம்பியூட்டரும் உங்கள் மானிட்டரில்!’ என்ற வாசகத்துடன் ‘ஆல்-இன்-ஒன்’ என வெளிவந்த கணினிகள் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதை விட ஒரு புரட்சியை செய்யவந்துள்ளது ஹெச்.பி. நிறுவனத்தின் HP Eliteboard G 1a.

பார்ப்பதற்கு சாதாரண கிபோர்டு போல இருக்கும் இதற்குள் ஒரு முழு கணினியே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திறன் உடன் உறங்குகிறது. இதை ஒரு மானிட்டரில் இணைத்து கொண்டால் போதும்.
carousel 02 keyboard sized freedom

இதில் ‘விண்டோஸ் 11 ப்ரோ’ மென்பொருளுடன், அதிவேக 16ஜி.பி.ராம்., 512 ஜி.பி. ஸ்டோரேஜ், ஏ.எம்.டி. ரைசென் ஏ.15 -330 ப்ராசசர் கொண்ட இந்த புதுவகை கணினியில் பிற சாதனங்களுடன் இணையும் 2 யு.எஸ்.பி. இணைப்பு, 3 ஹே.டி.எம்.எல். இணைப்புகள், 1 டிச்பிளெ இணைப்பு உள்ளது.
images?q=tbn:ANd9GcSUBf5S6mtDTNabspxjib XezfhVPm8bDTLvOmJdzHSRVi3kZl28MKyJvs&s=10

இதன் மொத்த எடை 1 கிலோவிற்கும் கீழ் தான் உள்ளது. இதை 65 வாட் அடாப்டர் மூலம் வழக்கமான கணினி போலவே தொடர்ந்து இயக்கலாம். நிறுவனத்தில் மின் தடை ஏற்பட்டால் இதற்கு உள்ளே இருக்கும் 32 வாட் பேட்டரி பணிகளை இடைநில்லாமல் முடிக்க உதவும். இதற்குள்ளே வை-பை வசதி, ஆடியோ ஸ்பீக்கர் வசதி என ஒரு கணினியில் எதிர்பார்க்கும் எல்லாமே வழங்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ‘அலுவலக கணினியின் திறன் ஒரு எளிய கீபோர்டில்’…