ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் துணை தலைவர் சங்கர் வேணுகோபால் தலைமை வகித்து மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், சுமார் 581 மாணவிகள் தங்களது பட்டங்களை பெற்றனர்.