அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பெல் இரா.தமிழரசன் முன்னிலை நடைபெற்ற இந்த நிகழ்வில் அ.தி.மு.க.வின் கோவை மாநகர் மாவட்டம், புறநகர் மத்திய மாவட்டம் மற்றும் புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் அதிமுகவின் கோவை புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் செ.ம.வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


